Thursday, July 28, 2011

கார பட்சணம் செய்ய டிப்ஸ்

கார பட்சணம் செய்ய டிப்ஸ்:

1 நெறைய கார பட்சணம் செய்வதானால், ஒரு பாத்திரத்தில், பிரண்டையை போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். உப்பும் போடவும். நன்கு கொதித்ததும் ஆறவைக்கவும். பிறகு வடிகட்டி அந்த நீரை கார பட்சணம் செய்யும்போது மாவு கலக்க உபயோகப் படுத்தவும். அதனால், பட்சணம் அதிக சுவையுடனும் , கரகரப்பாகவும் இருக்கும்.

2 நெய் அல்லது வெண்ணை சொன்ன அளவைவிட சற்று குறைவாக இருந்தால் பட்சணம் கரகரப்பு குறைவாக வரும். அதை தவிர்க்க, நெய் அல்லது வெண்ணையுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும். பிறகு அதை மாவுடன் கலக்கவும். பட்சணம் நல்ல 'கரகரப்'பாக வரும்.

3 கார பட்சணம் செய்யும்போது அது கரகரப்பாக வந்ததா என தெரிந்துகொள்வதற்கு (பெருமாளுக்கு படைக்கும் முன் சாப்பிடக் கூடாது )
பட்சணத்தை வெறுமன கிழே போடணும். ( not forcibly ) அது நன்றக உடைந்தால் , கரகரப்பாக உள்ளது என அர்த்தம். புன்னகை" src="http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif" alt="புன்னகை" longdesc="4">

சுவையான 'மிக்ஸ்ர்'

ஒரு பெரிய பேசினில் ,ஓமபொடி, காரா பூந்தி ,கனமான அவல் (வறுத்து), பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ), முந்தரி பருப்பு (வறுத்து உடைத்து), கோதுமை சிப்ஸ் ',உருளை சிப்ஸ், காரா சேவை அல்லது முள்ளு தேன்குழல்' என் எல்லாவற்றிலும் ஒவ்வொரு கப் எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையும் பொறிதுப்போட்டு குலுக்கவும்.
பிறகு உப்பு, மிளகாய்பொடி , மற்றும் பெருங்காயபொடி போட்டு குலுக்கவும்.
சுவையான 'மிக்ஸ்ர்' ரெடி.

தட்டை

தேவையானவை:

1cup அரிசி மாவு ( களைந்து உலர்த்தி அரைத்து )
3sp வெண்ணை
2 -3sp உளுந்து பொடி (வறுத்து அரைத்து )
2 -3sp தேங்காய் துருவல்
2sp கடலை பருப்பு (ஊறவைத்து )
2sp மிளகாய்பொடி
1sp எள்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேல் கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
பிறகு சிறிது தண்ணிவிட்டு கெட்டியாக பிசையவும்.
ஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இல்லை துண்டில் எண்ணெய் தடவவும்.
சிறிதளவு மாவு எடுத்து தட்டை போல் தட்டவும்.
அது போல் 4 - 5 தட்டினதும்
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்
தட்டி வைத்துள்ள தட்டைகளை போடவும்.
நிதானமாக திருப்பவும்.
நன்கு வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இது போல் செய்யவும்.
கர கரப்பான தட்டை ரெடி.

ரிப்பன் பகோடா

தேவையானவை :

1cup கடலை மாவு
1 1 / 2cup அரிசி மாவு
1sp மிளகாய்பொடி
சோடா உப்பு ஒரு சிட்டிகை
2 -3 sp நெய்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
'ரிப்பன் பகோடா'/'நாடா பகோடா' தயார்.

ஓமபொடி

2 தேவையானவை :

2cup கடலை மாவு
2cup அரிசி மாவு
1sp ஓமம்
2 -3 sp பட்டர் - வெண்ணை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஓமத்தை அரை மணி தண்ணிரில் ஊறவைக்கவும்.
பிறகு களைந்து, மண், கல் அரித்து நன்றாக அரைக்கவும்.
அரைத்ததை வடிகட்டவும்.
ஒரு பெரிய பேசினில் மாவு,உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
வடிகட்டிய நீரைவிட்டு கைகளால் நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'ஓமபொடி' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.

குறிப்பு: நல்ல மஞ்சள் நிறமான 'ஓமபொடி' வேண்டுமானால், 'foodcolours இல் மஞ்சள் கலரை இரண்டு சொட்டு மாவில் விடவும்.
ஓமவல்லி இலைகளை அரைத்தும் வடிகட்டி உபயோகிக்கலாம்.
அல்லது குழந்தைகளுக்கு தரும் 'ஓம வாட்டர் ' இருந்தால் 2 ஸ்பூன் விடலாம்.

மனங்கொம்பு - 'முள்ளு தேன்குழல்'

தேவையானவை :

2 cup அரிசி மாவு
1cup கடலை மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
1 /2sp பெருங்காய பொடி
2 -3 sp எள்
உப்பு
பொரிக்க எண்ணெய்


செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
நிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.
சிறிது நேரம் கழித்து திருப்பவும்.
மறுபுறமும் வெந்ததும் எடுக்கவும்.
கரகரப்பாக நன்றாக இருக்கும்.

காரா சேவ்

தேவையானவை :

2 1 /4cup கடலை மாவு
1cup அரிசி மாவு
2 -3 sp பட்டர் - வெண்ணை
2 -3 sp மிளகு சீரகம் (ஒன்று இரண்டாக பொடித்தது )
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு, மிளகு சீரகம், உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.
அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,
தேன்குழல் அச்சில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
உடனே திருப்பவும் , பிழிந்த மாவு துண்டு துண்டாக ஆகும்.
பவுன் கலர் வந்ததும் எடுத்துவிடவும்.
மொத்த மாவையும் இதுபோல் காரா சேவைகளாக பிழியவும்.

குறிப்பு: பூந்தி கரண்டி போல் 'காரா சேவ்' கரண்டி இருந்தால் அதில் தேய்க்கலாம்.

காரா பூந்தி

தேவையானவை :

2cup கடலை மாவு
2sp அரிசி மாவு
50gms முந்தரி பருப்பு
உப்பு தேவையான அளவு
மிளகாய்பொடி தேவையான அளவு
கறிவேப்பிலை கொஞ்சம்
1 /2sp பெருங்காய பொடி
'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

முந்தரி பருப்பு தவிர மீதி பொருட்களை நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு 'தோசை மாவு' பதத்துக்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சுட்டதும்,
பூந்தி கரண்டி இல் மாவை விட்டு, ஒரு கரண்டியால் தட்டவும்
பூந்திகள் எண்ணெய் இல் தொடர்ந்து விழனும்.
பிறகு பொறித்த பூந்திகளை வடிதட்டில் போடவும்.
இது போல் மொத்த மாவையும் பூந்தி யாக பொரிக்கவும்.
முந்திரியை பொரித்து போட்டு கலக்கவும்.
சுவையான 'காரா பூந்தி ' ரெடி.

குறிப்பு: காரம் அதிகம் வேண்டுவோர் , பொறித்த பூந்தி இல் மீண்டும் உப்பு காரம் போட்டு குலுக்கிய பின் உபயோகிக்கவும்.

'பட்டர் முறுக்கு'

தேவையானவை :

1cup பச்சரிசி மாவு ( களைந்து, உலர்த்தி, பொடித்து சலித்து )
2 -3 sp பட்டர் - வெண்ணை
2 -3 sp தேங்காய் துருவல்
3 sp உளுத்தம் பொடி (வறுத்து அரைத்து )
1sp சீரகம் (சுத்தம் செய்தது )
பெருங்காயபொடி ஒரு சிட்டிகை
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மேலே கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.
ஒரு 'பிளாஸ்டிக்' கவரிலோ வெள்ளை வேஷ்டியிலோ கொஞ்சம் மாவு எடுத்து
முறுக்கு சுற்றவும்.
எல்லா மாவும் சுற்றிய பின் 4 - 4 ஆக எண்ணெய் இல் போட்டு எடுக்கவும்.
பொன்னிறமாக எடுக்கவும்.
வாயில் கரையும் 'பட்டர் முறுக்கு' தயார். ஜொள்ளு" src="http://r18.imgfast.net/users/1813/71/41/02/smiles/95051.gif" alt="ஜொள்ளு" longdesc="53">

மைதா சிப்ஸ் - 2

தேவையானவை :

2 cup மைதா மாவு
1 /4 cup சன்ன ரவை
1sp மிளகு பொடித்தது
'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
1 தேக்கரண்டி புளிக்காத தயிர்
4 தேக்கரண்டி உருகின நெய்
7 தேக்கரண்டி வெந்நீர்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

ஒரு பெரிய பேசினில் மாவு, ரவை , மிளகு பொடி மற்றும் நெய் யை போடவும்.
கைகளால் நன்கு கலக்கவும்.
அவை மொத்தம் நன்கு கலந்து, 'பிரட் தூள்' போல் இருக்கவேண்டும்.
இதில் புளிக்காத தயிர் + வெந்நீர் விட்டு, நன்கு பிசையவும்.
ஒரு அரை மணி மூடி வைக்கவும்.
பிறகு சப்பாத்தி போல் இட்டு, சின்ன சின்ன 'சதுரங்களாக' வெட்டவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு, வெட்டிய துண்டங்களை பொரித்து எடுக்கவும்.
'மைதா சிப்ஸ் ' தயார்.

குறிப்பு: இதை சின்ன சின்ன தட்டை போலவும் செய்து பொரிக்கலாம்.

மைதா சிப்ஸ்

தேவையானவை :

1cup மைதா மாவு
1sp ஓமம்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மாவில், உப்பு + ஓமம் போட்டு, தண்ணீர் விட்டு ரொட்டி மாவு போல் பிசையவும்.
சப்பாத்தி போல் இட்டு, சின்ன சின்ன 'சதுரங்களாக' வெட்டவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு, வெட்டிய துண்டங்களை பொரித்து எடுக்கவும்.
'மைதா சிப்ஸ் ' தயார்.

குறிப்பு: ஓமம் விரும்பாதவர்கள் மிளகாய் பொடி போடலாம். அல்லது வெறும் உப்பு போட்டுவிட்டு பொரித்தும் மிளகாய்பொடி + பெருங்காயபொடி போட்டு குலுக்கலாம். அல்லது மிளகு பொடியும் போடலாம்.

கோதுமை சிப்ஸ் கொஞ்சம் 'கலர்' குறைவாக இருக்கும் . இது நல்ல வெள்ளையாய் இருக்கும்.

கோதுமை சிப்ஸ்

தேவையானவை :

1cup கோதுமை மாவு
1sp ஓமம்
உப்பு
பொரிக்க எண்ணெய்

செய்முறை:

மாவில், உப்பு + ஓமம் போட்டு, தண்ணீர் விட்டு ரொட்டி மாவு போல் பிசையவும்.
சப்பாத்தி போல் இட்டு, சின்ன சின்ன 'சதுரங்களாக' வெட்டவும்.
அடுப்பில் எண்ணெய் விட்டு, வெட்டிய துண்டங்களை பொரித்து எடுக்கவும்.
'கோதுமை சிப்ஸ் ' தயார்.

குறிப்பு: ஓமம் விரும்பாதவர்கள் மிளகாய் பொடி போடலாம். அல்லது வெறும் உப்பு போட்டுவிட்டு பொரித்தும் மிளகாய்பொடி + பெருங்காயபொடி போட்டு குலுக்கலாம். அல்லது மிளகு பொடியும் போடலாம்.

'நிஜமான மிக்ஸ்ர்'

'மிக்ஸ்ர்' என்றாலே கலப்பது தான். பின்வருவனவற்றை செய்யாமல் வெளியில் வாங்கியே கலக்கலாம் . ( உண்மையான மிக்ஸ்ர் பிறகு சொல்கிறேன்)

தேவையானவை :

100gms காரா பூந்தி
100gms ஓமபொடி
100gms கனமான அவல் (வறுத்து)
100gms பொட்டுகடலை
100gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )
50gms முந்தரி பருப்பு (வறுத்து உடைத்து)
50gms உலர் திராக்ஷை
50gms காரசேவ்
உப்பு தேவையான அளவு
மிளகாய்பொடி தேவையான அளவு

செய்முறை:

மேலே சொன்ன பொருட்களை ஒரு பெரிய பேசினில் போட்டு கலக்கவும்.
'மிக்ஸ்ர்' ரெடி.

'அவல் மிக்ஸ்ர்' 2

தேவையானவை :

200gms கனமான அவல்
100gms பொட்டுகடலை
100gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )
50gms முந்தரி பருப்பு (உடைத்து)
50gms உலர் திராக்ஷை
50gms எள்
25gms சோம்பு
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காய பொடி - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
2 - 3 சிகப்பு மிளகாய்
1sp கடுகு
1sp - 2sp எண்ணெய்
1sp சர்க்கரை (பொடித்தது)


செய்முறை:

ஒரு கடாயை சூடுபடுத்தவும்.
அதில் கனமான அவல்/கெட்டி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
இப்போது எண்ணெய் விட்டு, கடுகு, உடைத்த சிவப்பு மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு சோம்பு, எள், பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ),முந்தரி பருப்பு (உடைத்து), உலர் திராக்ஷை,கறிவேப்பிலை பெருங்காய பொடி,மஞ்சள் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.
அடுப்பை சிறிய தணலில் வைக்கவும்.
உப்பு, சர்க்கரை (பொடித்தது) சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
இப்போது தனியே வறுத்து வைத்த அவலை போட்டு நன்கு கலக்கவும்.
அடுப்பை அணைக்கவும்.
சுவையான 'அவல் மிக்ஸ்ர்' ரெடி.

அவல் மிக்ஸ்ர்

தேவையானவை :

200gms மெல்லிய அவல்
50gms கனமான அவல்
50gms பொட்டுகடலை
50gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )
20gms முந்தரி பருப்பு
20gms உலர் திராக்ஷை
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காய பொடி - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
2 - 3 பச்சை மிளகாய் (பொடியாக அரியவும்)
1sp கடுகு
1sp - 2sp எண்ணெய்
1sp சர்க்கரை (பொடித்தது)

செய்முறை:

ஒரு கடாயை சூடுபடுத்தவும்.
அதில் கனமான அவல்/கெட்டி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
அடுத்தது மெல்லிய அவல் போட்டு வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
இப்போது எண்ணெய் விட்டு, கடுகு, பொடியாக அரிந்த பச்சை மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்.
பிறகு பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ),முந்தரி பருப்பு (உடைத்து), உலர் திராக்ஷை,கறிவேப்பிலை பெருங்காய பொடி,மஞ்சள் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.
அடுப்பை சிறிய தணலில் வைக்கவும்.
உப்பு, சர்க்கரை (பொடித்தது) சேர்க்கவும்.
நன்கு கலக்கவும்.
இப்போது தனியே வறுத்து வைத்த அவலை போட்டு நன்கு கலக்கவும்.
அடுப்பை அணைக்கவும்.
சுவையான 'அவல் மிக்ஸ்ர்' ரெடி.

குறிப்பு: உங்களிடம் 'மைக்ரோவேவ் அவன்' இருந்தால், அவலை அதில் வைத்து 1 நிமிடம் சூடுபடுத்தி விட்டு மிக்ஸ்ர்ல் சேர்க்கலாம். அது இன்னும் சுலபம்.

Blog Archive