Thursday, August 25, 2011

மணி கொழுக்கட்டை

இது வும் மேல் மாவு மீந்து போனால் செய்யக்கூடியது. அல்லது நீங்கள் இதில் பால் கொழுக்கட்டை கூட செயலாம் புன்னகை
பால் கொழுக்கட்டை

செய்முறை:

கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.
வெந்த உருண்டைகளை போட்டு கிளறவு.
அடுப்பை சின்னதாக்கவும் .
தோசை மிளகாய் பொடி தூவி கிளறி இறக்கவும்
'மணி கொழுக்கட்டைகள்' தயார்
ரொம்ப சுவையாக இருக்கும்.

கார உளுந்து கொழுக்கட்டை 2

தேவையானவை:

உளுந்து 1 கப்
பச்சை மிளகாய் 4 -5
சிவப்பு மிளகாய் 4 -5
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்

செய்முறை:

உளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.
உரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு கார கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.
குக்கர் இல் இட்லி போல் ஆவி இல் வேகவைத்து எடுக்கவும்.
மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் புன்னகை)
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.
நன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.
கொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
வாணலி இல் பூரணத்துடன் போடவும்.
நன்கு கிளறி இறக்கவும்.
கார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்

குறிப்பு: கொழுக்கட்டை மேல் மாவு மீந்து போனாலும் இப்படி செயலாம்

உளுந்து (கார) கொழுக்கட்டை

தேவையானவை:

உளுந்து 1 கப்
பச்சை மிளகாய் 4 -5
சிவப்பு மிளகாய் 4 -5
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை 1 ஆர்க்கு
எண்ணை 1 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்

செய்முறை:

உளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.
உரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு கார கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.
குக்கர் இல் இட்லி போல் ஆவி இல் வேகவைத்து எடுக்கவும்.
மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் புன்னகை)
வாணலி இல் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.
நன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.
ஆறினதும், நீள் உருண்டைகள் பிடித்து வைக்கக்வும்.
சோப்பு செய்து, இந்த நீள் உருண்டைக ளை அதில் வைத்து, ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை ஒட்டவும்.
தித்திப்பு மற்றும் கார கொழுக்கட்டைகளை பிரித்து காட்டவே இந்த வித்தியாசம் புன்னகை
ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.
கார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்

கடலை பருப்பு பூரணம்

கடலை பருப்பு பூரணம் இதுவும் இனிப்பு பூரணம் தான்.

தேவையானவை:

கடலை பருப்பு 1/2 குப்
வெல்லம் 1/2 குப்
ஏலப்பொடி
1/2 ஸ்பூன்
நெய் 2 -3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கடலை பருப்பை களைந்து, மட்டாய் தண்ணீர் விட்டு குக்கர் இல் வேகவைக்கவும்.
ஆறினதும், மிக்சி இல், வெந்த கடலை பருப்பு, தேங்காய் துருவல், ஏலப்பொடி, வெல்லம் போட்டு அரைத்து எடுக்கவும்.
வாணலி இல் நெய்விட்டு, அரைத்தத்தை போட்டு நன்கு கிளறவும்.
'மொத்தமாக' உருண்டு வந்ததும், இறக்கவும்.
ஆறினதும், சின்ன சின்னஉருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
இது தான் 'கடலை பருப்பு பூரணம்'
சொப்பு செய்து, அதன் உள் இதை வைத்து மூடவும்.
ஆவி இல் வேக வைக்கவும்.
கடலை பருப்பு கொழுக்கட்டை ரெடி புன்னகை

குறிப்பு: இதே பூரணம் தான் போளி செய்வதர்க்கும்

எள் கொழுக்கட்டை

தேவையானவை:

எள் 1/2 கப் ( நன்கு சுத்தம் செய்யவும்)
வெல்லம் 1/2 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை:
எள்ளை வற்ட்டு வாணலி இல் வறுக்கவும்.
நன்கு வெடித்ததும் இறக்கவும்.
மிக்சி இல் வறுத்த எள், வெல்லம், ஏலக்காய் போட்டு பொடிக்கவும்.
இது தான் எள் பூரணம்.
இதை கொழுக்கட்டை சொப்பு செய்து, அதனுள் வைத்து ஆவி இல் வேக வைக்கக்வும்.'எள் கொழுக்கட்டை 'தயார்.

பூரண கொழுக்கட்டை

இப்ப பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்போம்

தேவையானவை:

தேங்காய் துருவல் 1 கப்
வெல்லம் 1/2 கப் (தேவையானால் 3/4 கூட போடலாம் )
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
அரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்
நெய் 1/2 ஸ்பூன்

செய்முறை:

வாணலி இல் கொஞ்சமாக (1/4 கப் ஐ விட குறைவாக ) தண்ணீர் விட்டு, வெல்லத்தை போட்டு கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் , வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து ஏலப்பொடி, நெய் போட்டு ஒரு கொதி வந்ததும்,
தேங்காய் துருவலை போடவும்.
நன்கு கிளறவும்.
நன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.
பிறகு உருண்டை பிடிக்கவும்.
சொப்பு செய்து அதன் உள் இதை வைத்து கொழுக்கட்டை செய்யவும்.
ஆவி இல் வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான 'பூரண கொழுக்கட்டைகள்' நைவேத்தியத்துக்கு தயார் புன்னகை

குறிப்பு: தேவையானால், பூரணத்தில் முந்திரி துண்டுகள் சேர்க்கலாம்

சொப்பு செய்ய வாரா விட்டால்?.....

கையால் சொப்பு செய்ய வராவிட்டால், இப்படி செய்து பாருங்கள்.
சாதாரணமாக, வரட்டு அரிசி மாவில் செய்வதை விட களைந்து உலர்த்தின மாவில் ஈசி யாக செய்ய வரும்.
அப்படி வராவிட்டால், ஒரு சின்ன உருண்டை மாவை எடுத்துக்கொண்டு, 2 பிளாஸ்டிக் பேபரின் நடுவில் வைத்து கையால் அல்லது அப்பாளாக்குழவியால் மெல்ல ஒரு ஓட்டு ஒட்டவும்.
ஒரு சிறிய வட்டமாக மாவு மாறும்.
அதை கை இல் எடுத்து, உள்ளங்கை இல் வைத்துக்கொண்டு, சிறிய ஸ்பூன் ஆல் பூரணத்தை எடுத்து அதில் வைத்து மெல்ல குவிக்கவும்.

அல்லது,

அதை ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்திவிடவும்.
இது 'சோமாஸ்' போல இருக்கும்.

அல்லது,

கோதுமை மாவை சப்பாத்தி க்கு பிசைவது போல் மாவு பிசைந்து, சிறிய சிறிய பூரி கள்ளாகவோ , அல்லது ஒரே பெரிய சப்பாத்தி போலோ இடவும்.
ஒரு டப்பா மூடியை கொண்டு சப்பாத்தி யை வட்ட வட்டமாக கட் செய்யவும்.
அதன் நடுவில் பூரணத்தை வைத்து குவித்து முடி, கொழுக்கைட்டை கள் செய்யவும்.
இது போல் மொத்தமும் செய்து விட்டு, அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து எல்லாவற்றைய்ம், நன்கு பொரித்து எடுக்கவும்.
இப்படி செய்வதால், 2 - 3 நாள் வைத்திருந்து சாப்பிடலாம்.
முதல் நாளே கூட செய்து வைக்கலாம்.
இது பத்து இல்லை புன்னகை

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்

இந்த வருடம் (2011) சதுர்த்தி செப்டம்பர் 1 ம தேதி வருகிறது. அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள் பற்றி இங்கு பார்போம்

கொழுக்கட்டை - விநாயகர் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது இது தான். இதில் இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டைகள் செயலாம் . முதலில் மேல் மாவு செய்யும் விதம் பார்க்கலாம்.
தேவையானவை:

அரிசி மாவு 2 கப் (களைந்து உலர்த்தி அரைத்தது)
உப்பு 1 சிட்டீகை
நெய் 1 டீ ஸ்பூன்
தண்ணீர் 1 1/2 முதல் 2 கப்

செய்முறை :

உருளி அல்லது ஆழமான 'non stick pan' இல் தண்ணீர் ஊற்றவும்
அது நன்கு கொதிக்கும் பொது, உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
அடுப்பை சின்னதாக்கி மாவை கொட்டி கிளறவும்.
அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.
நன்கு உருண்டு வந்ததும் முடிவைக்கவும்.

சொப்பு செய்யும் முறை :

கொஞ்சம் ஆறினதும், நன்கு அழுத்தி பிசையவும்.
மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்துக்கொண்டு, விரல்களால் ஓரத்தை அழுத்திக்கொண்டே கப் போல் செய்யவும்.
கட்டைவிரலை நடுவில் அழுத்திக்கொண்டு, மற்ற விரல்களால் ஓரத்தை அழுத்தவும்.
சிறிய கப் வடிவம் வந்ததும், செய்து வைத்துள்ள பூரணத்தை ( தேங்காய் பூரணம், உளுந்து பூரணம்,எள் பூரணம், கடலை பருப்பு பூரணம் ) வைத்து உள்ளங்கை யை குவித்து கப் இன் ஓரங்களை ஒன்றாக சேர்த்து குவிக்கவும்.
குவித்ததை அழுத்தி மோதகம், அதாவது கொழுக்கட்டையாக பிடிக்கவும்.
இட்லி தட்டில் வைத்து ஆவி இல் வேக விடவும்.
கொழுக்கட்டை தயார். புன்னகை

Blog Archive